Monday, May 25, 2015

கலிபோர்னியா: விண்வெளியில் கிட்டதட்ட 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்கும் ஒளிக்கு சமமான அளவு ஒளிரும் புதிய கேலக்ஸி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




அகச்சிவப்பு எக்ஸ்ப்ளோரர் அல்லது வைஸ் என அழைக்கப்படும் இந்த புதிய கேலக்ஸியை நாசா கண்டுபிடித்துள்ளது. இது சுமார் 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்க கூடிய அளவிற்கு ஒளியை வெளியிட்டு வருகிறது.









இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கேலக்ஸிகளிலேயே இந்த அளவிற்கு ஒளிரும் கேலக்ஸி எதுவும் இல்லை. இதற்கு காரணம் இதன் மையத்தில் அமைந்திருக்கும் கரும்துளை தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.



ஆனால் தற்போது விஞ்ஞானிகள் காணும் ஒளியானது 12.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் பயணம் செய்துள்ளது. எனவே தற்போது நாம் காணும் கேலக்ஸியானது கடந்த காலத்தை சேர்ந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



Slide